மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்ற...
மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் சாரதி உட்பட 5 சந்தேக நபர்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 10, கொழும்பு 13, வெல்லம்பிட்டிய, கொழும்பு 14 ஆகிய இடங்களில் 19 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 54 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிசூட்டில் பலத்த காயமடைந்த பெண் மற்றும் அவரது கணவர் இருவரையும் சுட்டுக் கொல்ல, போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான பலாவீ எமோஷனின் வழிகாட்டுதலின் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வாக்குவாதத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.