முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர். முன்னாள் ஜனாதிப...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை மீளப் பெறுவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான காவல்துறை பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.