தேர்தல் காலங்களில் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டவர்கள் மற்றும் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...
தேர்தல் காலங்களில் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டவர்கள் மற்றும் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றது.
இதன்போது, பல ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.