சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானம் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக மயான நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மயான புனரமைப்பு ப...
சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானம் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக மயான நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மயான புனரமைப்பு பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பாதீட்டில் ஐந்து இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து அண்மையில் மக்கள் பாவனைக்காக மயானம் ஒப்படைக்கப்பட்ட போது, யாழ் . மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் து. ஈசன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.