இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரி...
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
குறித்த இறக்குமதி செய்யப்பட்ட 85,000 மெட்றிக் தொன் அரிசியில் 33,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும் 52,000 மெட்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும் சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.
இந்த 85,000 மெட்றிக் தொன் அரிசியில் அரச நிறுவனமான அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.
நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி முதல் வழங்கியுள்ளது.