நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ ...
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் இன்றையதினம் மாலை (21-01-2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபர்களையும், இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் கேவலமான வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டமையை கண்டித்தும் அவருக்கு எதிராக இந்து கலாச்சார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.