யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் (21.1.20...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (21.1.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.