போயா தினத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடமொன்று யாழில் முற்றுகையிடப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கை...
போயா தினத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடமொன்று யாழில் முற்றுகையிடப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
போயா தினமான இன்று மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதற்கமைய புலனாய்வு பிரிவினரும் யாழ் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவும் இனைந்து அப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இதன் போது போயா தினத்தில் மதுகானம் விற்பனை செய்த இடம் முற்றுகை இடப்பட்டு அங்கிருந்த பெருமளவிலான மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானமும் சந்தேக நபரும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.